உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-01-24 19:03 GMT
நெல்லை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், தி.மு.க. தலைமையை கண்டித்தும் நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை தாங்கி பேசினார்.

கோஷங்கள்

இன்பதுரை எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். மேலும் தி.மு.க.வையும், உதயநிதி ஸ்டாலினையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், சவுந்தரராஜன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், பரணி சங்கரலிங்கம், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லதுரை, நெல்லை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.செல்வக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன்கிருபாநிதி, களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் பூவராகவன் என்ற பூவராஜன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் லாரன்ஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்ேதாணி அமலராஜா, எஸ்.கே.எம்.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்