திருச்செங்கோடு அருகே டிப்பர் லாரி- தனியார் பஸ் மோதல்; 6 பேர் காயம்

திருச்செங்கோடு அருகே மின்னாம்பள்ளி பகுதியில் சென்றபோது திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற டிப்பர் லாரியும், தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2021-01-24 17:44 GMT
எலச்சிபாளையம்:

ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்செங்கோடு அருகே மின்னாம்பள்ளி பகுதியில் சென்றபோது திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற டிப்பர் லாரியும், தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் செல்ல தர்ஷினி (வயது 6), ஜானகிதேவி (14), சரண்யா (14), செங்கோடன் (58), பழனியப்பன் (62) தங்கராஜ் (48) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்