கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-01-24 16:21 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வலியுறுத்தியும், மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் மாயவன், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் அசோகன், குபேந்திரன், மகளிரணி ஜெயலட்சுமி, சத்தியவாணி, தொகுதி செயலாளர்கள் செம்பட்டி சிவா, பிரபாகர், துணை செயலாளர்கள் துரைகுட்டி, முனிசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அருண், ரமேஷ், சசிகுமார், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்