கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரை 8,304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,882 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 117 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.