புயல், மழை வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்க 16 மாவட்டங்களில் ஆப்தமித்ரா திட்டம்
புயல், மழை வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஆப்தமித்ரா என்ற மத்திய அரசின் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பேரிடர் தணிப்பு தொடர்பான தன்னார்வலர்கள் தேர்வு செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசின் ஆப்த மித்ரா என்ற புதிய திட்டம் பற்றிய கையேட்டினை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா வெளியிட்டார். அதனை கலெக்டர் செந்தில் ராஜ் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆப்தமித்ரா திட்டம்
புயல், தொடர் மழை வெள்ளம் ஆகியவற்றின்போது பொதுமக்களை பாதுகாப்பதற்காக முதல்நிலை களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
தீவிரமாக களப்பணியாற்றி மக்களை காப்பாற்றும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள். ஆப்தமித்ரா என்ற இந்த புதிய திட்டம் தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்கள் உள்பட 16 மாவட்டங்களில் கொண்டுவரப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 பேர் முதல் 500 பேர் என தமிழகத்தில் 5 ஆயிரம் தன்னார்வலர்களை இத்திட்டத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
பின்னர் அவர்களுக்கு சென்னை மற்றும் பிற இடங்களில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் இந்த திட்டமானது அடுத்த மாதம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா (பொது), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், கடலோர காவல் படையினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.