முதல்-மந்திரி ஆவதில் எனக்கு அவசரம் இல்லை மந்திரி அசோக் சவான் பேட்டி

முதல்-மந்திரி ஆவதில் தனக்கு அவசரம் இல்லை என்று பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறினார்.;

Update: 2021-01-24 00:29 GMT
மும்பை, 

தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் சமீபத்தில் தனக்கு முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான அசோக் சவான் முதல்-மந்திரி ஆவதில் தனக்கு அவசரம் இல்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே தற்போது மாநிலத்தின் தலைவராக உள்ளார். நாங்கள் முழு மனதுடன் அவருடன் உள்ளோம். முதல்-மந்திரி ஆவதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. மகா விகாஸ் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து உள்ளோம். இதற்கு இடையூறு செய்ய சிலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்