எருமப்பட்டி அருகே மாடு திருடிய 2 பேர் கைது ஆட்டோ பறிமுதல்

எருமப்பட்டி அருகே மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-01-23 21:45 GMT
எருமப்பட்டி,

எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முட்டாஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்தவர் அப்துல் ரசீது (வயது 61). இவர் தனது தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஒரு மாடு காணாமல் போனது. அக்கம், பக்கம் தேடி பார்த்தும் மாடு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் கரூர் அருகே உப்பலமங்கலம் மாட்டு சந்தையில் அவரது மாடு இருப்பது தெரியவந்தது. உடனே மாட்டையும், மாட்டை கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோவையும் பிடித்து வந்து அப்துல் ரசீதும், அவரது உறவினர்களும் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் மாடு திருடியது எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி புதூரை சேர்ந்த கணேசன் மகன் தனபால் (35) என்பதும், இவர் மாட்டை திருடி, திருச்சி மாவட்டம் கொளக்குடி வரை ஓட்டி சென்றதும், பின்னர் அங்கு கொளக்குடி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த செல்லையா மகன் மணி (45) என்பவரின் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அதில் மாட்டை ஏற்றி சென்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபால், மணி ஆகிய இருவரையும் கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்