தொழிற்பள்ளிகள் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கடைசிநாள்
குமரியில் தொழிற்பள்ளிகள் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான கடைசி நாள் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 2021-2022-ம் கல்வி ஆண்டில் ஜூலை 1-ந் தேதி முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு ஜனவரி 2-ந் தேதி முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒரு தொழிற்பள்ளிக்கு அங்கீகாரம் பெற ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதும். விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்கவேண்டும்.
ஏப்ரல் மாதம்
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து அல்லது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பகட்டணம் செலுத்தவேண்டும்.
விண்ணப்பகட்டணம், ஆய்வுகட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் ஏப்ரல் 30-ந் தேதி. அதற்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு...
மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்டதிறன் பயிற்சிஅலுவலகத்தில் நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி, செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது மண்டலபயிற்சி இணை இயக்குனர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, என்.ஜி.ஓ. ‘பி’ காலனி, பெருமாள்புரம் அஞ்சல், திருநெல்வேலி- 627 007 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.