குடியரசு தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவையொட்டி நெல்லையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2021-01-22 19:07 GMT
நெல்லை,

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

அப்போது போலீஸ், ஊர்க்காவல் படை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

அணிவகுப்பு ஒத்திகை

இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், தேசிய மாணவர் படையினர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது மற்றும் அணிவகுப்பு நடத்துவது போன்று ஒத்திகை செய்தனர்.

மேலும் செய்திகள்