காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை

திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த பட்டதாரிபெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-22 22:15 GMT
தற்கொலை செய்து கொண்ட கொடீஸ்வரி

திண்டிவனம்

திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த பட்டதாரிபெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் அருகே உள்ள கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 33). பிளஸ்-2 வரை படித்துள்ள, இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோடீஸ்வரி (25). எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி ஆவார்.
இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெகதீஷ் (7), ரோகித்(4) என 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாலையில், அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கோடீஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோடீஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
காதல் திருமணம் செய்த பெண், தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்