கடலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு

கடலூர் பகுதியில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது;

Update: 2021-01-22 22:30 GMT
நெல்லிக்குப்பம், 

கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் குளிரில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பரவலாக மழை பெய்ததால் குளிர் சற்று குறைந்த இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டது. நெல்லிக்குப்பத்தில் நேற்று காலை 8 மணி வரை மூடுபனியால் சூழப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகள், விபத்தை தடுக்கும் வகையில், தங்கள் வாகனங்களில், முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் ரெயில்களும் முகப்பு விளக்குகளை எரியவி்ட்டபடி சென்றன. 

மேலும் செய்திகள்