கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை,
அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பொன்மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
மத்திய சங்கத்தலைவர் கல்யாணராமன் மற்றும் சட்ட ஆலோசகர் சிறப்புரையாற்றினர்.
அப்போது, ஸ்டேஷன் மாஸ்டர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்டேஷன் சூப்பிரண்டு மற்றும் ஸ்டேஷன் மேலாளர் பதவி உயர்வு உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரவுப்பணி அலவன்சை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அனுமதி கிடைக்காததால், ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.