சேலத்தில் மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் தர்மபுரியை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-01-22 01:52 GMT
சேலம்:
சேலத்தில் தர்மபுரியை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவ மாணவர் 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் இளஞ்சேரன் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 20-ந்தேதி கல்லூரியில் இருந்து சேலத்திற்கு வந்தார். இதையடுத்து அன்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.
தொடர்ந்து சேலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு இரவு அறையில் தங்கி உள்ளார். பின்னர் நேற்று மாலை வரை அவர் தங்கி இருந்த அறை திறக்கவில்லை. இதையொட்டி விடுதி ஊழியர்கள் அறைக்கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை. அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
தற்கொலை 
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது இளஞ்சேரன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதையொட்டி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்