சேலம் அருகே மனைவியை கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2021-01-22 01:52 GMT
சேலம்:
மனைவியை கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
லாரி டிரைவர்
சேலம் கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). லாரி டிரைவர். இவரது மனைவி சசிகலா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், சசிகலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 
வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மனைவியை கொன்ற சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராமஜெயம் தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்