சீர்காழியில், மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-01-21 22:28 GMT
சீர்காழி,

சீர்காழி பகுதியில் கடந்த வாரம் பருவம் தவறி பெய்த தொடர் மழையால் புளிச்சகாடு, குணதலபாடி, ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து மூழ்கி அழுகி வருகிறது.

இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை வேளாண்மை துணை இயக்குனர் (பயிர் காப்பீடு) அபிபுல்லா, புளிச்சகாடு பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரிசோதனை

தொடர்ந்து பயிர் காப்பீட்டு துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்து அறுவடை செய்யப்பட உள்ள நிலங்களை தொடர்ந்து கண்காணித்து அறுவடை பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்.

அப்போது மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மதியரசன், சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், சீர்காழி வேளாண்மை அலுவலர் சின்னண்ணன், துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் ராமன், தமிழரசன் ராமச்சந்திரன், விஜய் அமிர்தராஜ் மற்றும் அலெக்சாண்டர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்