மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

Update: 2021-01-21 22:22 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணி ரெயிலடி காவிரி நகரில் இருந்து தொடங்கியது.

இதில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டு கொடியசைத்து மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி பூக்கடை தெரு, கூறைநாடு வழியாக பஸ் நிலையம் வரை சென்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இந்த பேரணியில் போக்குவரத்து போலீசார், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டிக்கர்கள்

முன்னதாக காவிரி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களின் முன்பக்க கண்ணாடி ஓரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை மாவட்ட கலெக்டர் ஒட்டினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, வட்டார போக்குவரத்து முதல் நிலை இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் காவல் துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர், அரசு போக்குவரத்து கழகத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்