கோவாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.39.37 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
கோவாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.39.37 லட்சம் மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
வெளிமாநிலத்தில் இருந்து அதிகளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக மாநில கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவத்தன்று தானே மாவட்டம் ஷில் பாட்டா பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த டெம்போவை வழிமறித்து சோதனை போட்டனர்.
அப்போது அந்த டெம்போவில் அட்டை பெட்டிகளில் அதிகளவில் மதுபாட்டில்கள் இருந்தன. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.39.37 லட்சம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கோவாவில் இருந்து மராட்டியத்துக்கு கடத்தி வரப்பட்டவை என அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.