இறந்துபோன மாட்டுக்கு இறுதிச்சடங்கு நடத்திய விவசாயி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே இட்டுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அசோக காமனகட்டி. விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ராமா என்ற காளை மாடும் ஒன்று.

Update: 2021-01-21 21:44 GMT
இறந்துபோன மாட்டுக்கு இறுதிச்சடங்கு நடத்திய விவசாயி
இந்த மாடு கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி பிறந்தது. அன்று முதல் இந்த காளை மாடு அசோக காமனகட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் பாசத்துடன் பழகி வந்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் அவர்களுடனே இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் ஒருவராக ராமா மாறிவிட்டது. இதனால் ஆண்டுதோறும் அசோக காமனகட்டி குடும்பத்தினர், ராமாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று ராமா திடீரென்று உயிரிழந்தது. இதை பார்த்து அசோக காமனகட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தங்களது குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்த ராமா இறந்ததால் அவர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர். மேலும் இறந்துபோன மனிதர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவது போல், இறந்துபோன மாடு ராமவுக்கு இறுதிச்சடங்கு நடத்தி, அதன் உடலை அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அசோக காமனகட்டி தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தார். இதில் அசோக காமனகட்டி குடும்பத்தினர் மட்டுமல்லாமல் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்