ஊத்துமலை-மேலமருதப்பபுரம் பகுதியில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

ஆலங்குளம் வட்டாரம் ஊத்துமலை மற்றும் மேலமருதப்பபுரம் கிராமங்களில் கனமழைக்கு உளுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Update: 2021-01-21 20:07 GMT
ஆலங்குளம்,

ஆலங்குளம் வட்டாரம் ஊத்துமலை மற்றும் மேலமருதப்பபுரம் கிராமங்களில் கனமழைக்கு உளுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், சென்னை வேளாண்மை இயக்குனரின் அறிவுரையின்படி சென்னை வேளாண் இயக்குனர் அலுவலக வேளாண்மை உதவி இயக்குனர் அருள்நங்கை மற்றும் வேளாண் அலுவலர் வேலவன் ஆகியோர் பருவம் தவறிய கனமழையினால் சேதமடைந்த உளுந்து பயிர் வயல்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், வேளாண்மை அலுவலர் அருண்குமார், உதவி விதை அலுவலர் மாரியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி, செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சின்ராஜ் ஆகியோர் சென்றனர். அப்பகுதி விவசாயிகள் திரண்டு வந்து, தங்கள் வயல்களில் சேதமடைந்த உளுந்து பயிர்களை அலுவலர்களிடம் காண்பித்து நிவாரணம் கோரினர்.

மேலும் செய்திகள்