சுத்தமல்லியில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்

சுத்தமல்லியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.;

Update: 2021-01-21 19:28 GMT
பேட்டை,

மானூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுத்தமல்லி பாரதியார் நகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவை தலைவரும், அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், ஒன்றிய இணை செயலாளர் கொண்டாநகரம் காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடாரங்குளம் பஞ்சாயத்து மந்தை காலனியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார். விழாவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவீன், சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் திருப்பதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, நகரசபை முன்னாள் துணை தலைவர் கணேசபெருமாள், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், அம்பை அறிவழகன், மணிமுத்தாறு ராமையா உள்பட பலர் பங்கேற்றனர்.

இடையன்குளம்

இதேபோல் களக்காடு அருகே இடையன்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அம்மா மினி கிளினிக்கையும் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார். விழாவில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், களக்காடு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூவராகவன், களக்காடு நகர செயலாளர் செல்வராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி, பயிற்சி மருத்துவ அதிகாரி முத்துராமலிங்கம், சிங்கிகுளம் மருத்துவ அதிகாரி கவிதா, சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன், ஊர் பிரமுகர்கள் ஜெயராஜ், தொழில் அதிபர் ரேக்லேன்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்