ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10¼ லட்சம் வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று வெளியிட்டார். இந்த பட்டியல்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 804 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 5,00,626. பெண்கள் 5,27,127. மூன்றாம் பாலினத்தினர் 51.
தொகுதிவாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:-
அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,26,511. ஆண்கள் 1,10,327. பெண்கள் 1,16,167. மூன்றாம் பாலினத்தினர் 17.
சோளிங்கர் தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,75,532. ஆண்கள் 1,35,256. பெண்கள் 1,40,266. மூன்றாம் பாலினத்தினர் 10.
ராணிப்பேட்டை தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,65,626. ஆண்கள் 1,28,391. பெண்கள் 1,37,219. மூன்றாம் பாலினத்தினர் 16.
ஆற்காடு தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,60,135. ஆண்கள் 1,26,652. பெண்கள் 1,33,475. மூன்றாம் பாலினத்தினர் 8.
இதுகுறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறியதாவது:-
இறுதி வாக்காளர் பட்டியல் 584 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், உதவி கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க விண்ணப்பித்தவர்கள் தங்களது பெயர், பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என பார்த்துகொள்ளலாம் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சப் -கலெக்டர் இளம்பகவத், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.