எடப்பாடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

எடப்பாடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2021-01-21 09:23 GMT
எடப்பாடி:
எடப்பாடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மூதாட்டி
எடப்பாடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு எடப்பாடி கடைவீதிக்கு குறுகலான சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது 30 வயதுடைய வாலிபர் பின்னால் வந்து முத்துலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டார்.
வலைவீச்சு
இந்த துணிகர சம்பவம் குறித்து முத்துலட்சுமி எடப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அப்பு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாலிக்கொடியின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்