இறுதி பட்டியல் வெளியீடு: அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 5,30,025 வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,30, 025 வாக்காளர்கள் உள்ளனர்

Update: 2021-01-21 02:07 GMT
அரியலூரில் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது எடுத்த படம்.

இறுதி வாக்காளர் பட்டியல்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்திற்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ரத்னா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது மாவட்டத்தில் 2,54,807 ஆண் வாக்காளர்களும், 2, 56,813 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,11,627 வாக்காளர்கள் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரையிலான காலத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திடவும் படிவங்கள் பெறப்பட்டன.

அரியலூர்

சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்ற படிவம் 6-ல் 10,374 விண்ணப்பங்களில் 10,348 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 26 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன. வெளிநாடுவாழ் இந்தியர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி வரப்பெற்ற படிவம் 6ஏ-ல் விண்ணப்பங்கள் ஏதும் வரப்பெறவில்லை.

படிவம் 7-ல் வரப்பெற்ற 926 விண்ணப்பங்களில் 896 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 30 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன. படிவம் 8-ல் வரப்பெற்ற 1,424 விண்ணப்பங்களில் 1,379 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 45 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன. படிவம் 8ஏ-ல் வரப்பெற்ற 764 விண்ணப்பங்களில் 759 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 5 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி வரப்பெற்ற படிவம் 6-ல் 9,876 விண்ணப்பங்களில் 9,837 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 39 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன. படிவம் 7-ல் வரப்பெற்ற 912 விண்ணப்பங்களில் 891 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும்,, 21 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன.

படிவம் 8-ல் வரப்பெற்ற 1,208 விண்ணப்பங்களில் 1,160 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 48 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8ஏ-ல் வரப்பெற்ற 362 விண்ணப்பங்களில் 360 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், 2 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன.

புதிய பட்டியல்

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,31, 335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,64,012 வாக்காளர்கள் உள்ளனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,66,013 வாக்காளர்கள் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் 2,62,998 ஆண் வாக்காளர்களும், 2,67,017 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,30,025 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஜோதி (அரியலூர்), பூங்கோதை (உடையார்பாளையம்), தேர்தல் தாசில்தார் குமரையா மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்