பதிவு செய்யப்பட்ட அன்றே பத்திரங்களை உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் பத்திர பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தல்
பதிவு செய்யப்பட்ட அன்றே பத்திரங்களை உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று பத்திர பதிவுத்துறை தலைவர் சங்கர் கூறினார்.;
நெல்லை,
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உடனான சீராய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
பத்திர பதிவுத்துறை தலைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பதிவாளர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான பத்திர பதிவுகளை எந்தவித குறைபாடும் இன்றி குறித்த காலத்திற்குள் பதிவுசெய்து பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற வேண்டும்.
கவனமுடன் செயல்பட வேண்டும்
பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவு செய்து அன்றே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சொத்து குறித்த வில்லங்கச் சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சொத்துக்களை பதிவு செய்யும்போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். பொது மக்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பதிவுத்துறை உதவி தலைவர்கள் கவிதா ராணி (நெல்லை), சின்னராஜ் (தூத்துக்குடி), மாவட்ட பதிவாளர் (ஆய்வு) மணி, பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளர் செல்வகுமாரி, சேரன்மாதேவி மாவட்ட பதிவாளர் பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.