மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு 14¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் ஆண்களை விட பெண்கள் அதிகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 14¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்காக மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன்படி தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க. துணை செயலாளர் சந்தனம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், பா.ஜனதா கனகராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்தது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16.11.20 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெறப்பட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி 25 ஆயிரத்து 40 ஆண் வாக்காளர்கள், 28 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள், 38 மூன்றாம் பாலினத்தோர் ஆக மொத்தம் 53 ஆயிரத்து 246 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்கள், முகவரி மாறி சென்றவர்கள் ஆகிய 15 ஆயிரத்து 879 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
14¾ லட்சம்
விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 548 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 4 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 543 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 879 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களும், 53 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 164 வாக்காளர்களும் உள்ளனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 69 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 38 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 375 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 132 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 622 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 வாக்காளர்களும் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 372 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்களும், 28 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 53 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 385 பெண் வாக்காளர்களும், 31 திருநங்கைகளும் ஆக மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 வாக்காளர்களும் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 24 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 57 ஆயிரத்து 151 பெண் வாக்காளர்களும், 164 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 81 ஆயிரத்து 799 வாக்காளர்கள் உள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
6 சட்டமன்ற தொகுதிகளிலும் 870 மையங்களில் 1603 வாக்குச்சாவடிகள் அமைந்து உள்ளன. புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் குறைவாகவே உள்ளது. இதனால் 01.01.21 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள தேர்தல் அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.