கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இறுதி பட்டியலில் 7¼ லட்சம் வாக்காளர்கள்
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 7¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், விளாத்திகுளம் தாசில்தார் ரகுபதி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் எஸ்.கே.முத்து ஆகியோர் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், கோவில்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகம்
கோவில்பட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900. இதில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 484 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 385 பேரும், திருநங்கைகள் 31 பேரும் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 15 ஆயிரத்து 543. இதில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 548 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 99 பேரும், திருநங்கைகள் 4 பேரும் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 53. இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 372 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 653 பேரும், திருநங்கைகள் 28 பேரும் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.