கயத்தாறு அருகே சிதம்பரபுரத்தில் ரூ.1 கோடி திட்டப்பணிகள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கயத்தாறு அருகே கடம்பூர் சிதம்பரபுரத்தில் ரூ.1 கோடிக்கான திட்டப்பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2021-01-20 00:42 GMT
கடம்பூர் சிதம்பரபுரத்தில் திட்டப்பணிகளை, அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தபோது

திட்டப்பணிகள்

கயத்தாறு அருகே கடம்பூர் சிதம்பரபுரம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடிக்கான திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று, திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, திட்ட இயக்குனர் தனபதி, ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் ரெனால்டு, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூ மாரியப்பன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கடம்பூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், சிதம்பரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

345 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு

இதனைத்தொடர்ந்து கடம்பூர் தாத்தா கோவிலில் சிதம்பரபுரம் கிராமத்தை சேர்ந்த 345 பயனாளிகளுக்கு தலா 25 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வீதம் 8,610 கோழிக்குஞ்சுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற நிதியில் இருந்து கட்டப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

மேலும், வாறுகால் பேவர் பிளாக் சாலை, சிமெண்டு சாலை, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி உள்பட பல்வேறு திட்டப்பணிகளை ரூ.93 லட்சத்தில் 61 ஆயிரம் மதிப்பீட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி கால்நடை உதவி இயக்குனர் சுரேஷ், திருச்செந்தூர் கால்நடை உதவி இயக்குனர் செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குனர் சம்பத், கோவில்பட்டி உதவி இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் உதவி மருத்துவர்கள் ராமசுப்பு, பாலமுருகன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்தில் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 17 கிராமங்களில் 4,800 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ேகாவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட இடைசெவல், சத்திரப்பட்டி கிராமங்களில் 1,546 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வீதம் 43,019 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்