திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

நகராட்சி அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2021-01-19 20:30 GMT

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வருவாய் ஆய்வாளராக ஜானகி பணிபுரிந்தார். அப்போது அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் வீடு, கடை கட்டியவர்களுக்கு குறைந்த அளவில் வரி விதிப்பு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.

ஜானகி தற்போது வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இதனையடுத்து நேற்று திருவள்ளூர் இந்திரா நகரில் வசித்து வரும் ஜானகி வீட்டில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சுமித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருநின்றவூர்

திருநின்றவூர் பிரகாஷ் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் லட்சுமிநாராயணன் (வயது 45). இவர் தற்போது பூந்தமல்லியில் உள்ள நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரிந்து வந்த போது பணம் கையாடல் தொடர்பாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு காஞ்சீபுரத்தில் இருந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் 4 பேர் கொண்ட போலீசார் திருநின்றவூர் பிரகாஷ் நகரில் உள்ள லட்சுமிநாராயணன் வீட்டுக்கு சென்று இதுதொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பகல் 2 மணி வரை போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்