செங்கல்பட்டு அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் முற்றுகை

செங்கல்பட்டு அருகே சாலை அமைக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-01-19 20:45 GMT
சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தற்காலிக சாலை

செங்கல்பட்டு அடுத்த மோசிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்குவதால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனத்தில் சென்றால் விபத்து நடப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த ரெயில்வே சுரங்க பாதையை கடந்து தான் 15 கிராம மக்கள் செல்ல வேண்டும். இந்த நிலையில் கண்டிகை கிராம மக்கள் தற்காலிக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முற்றுகை

தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். அந்த இடத்தில் சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி வாங்கிய பிறகே பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறினர்.

இந்த நிலையில் கண்டிகை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்