சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டல் தொழிலாளி

தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-19 18:55 GMT
தாராபுரம், 

தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் சபரி முத்து என்பவரது மகன் பிரகாஷ் (வயது 20). இவர் தாராபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பிரகாஷ் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் அந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். 

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரிக்குமாறு சிறுமியின் பெற்றோர் கூறினர். இதையடுத்து பிரகாசை பிடித்து மகளிர் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றதாகவும், அப்போது அந்த சிறுமி தப்பித்து ஓடிவந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பிரகாசை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்