கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலி

பென்னாகரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2021-01-19 18:46 GMT
கோப்புப்படம்
பென்னாகரம்,

பென்னாகரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெக்குந்தி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மகன் பூவரசு (வயது 18). தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த 17-ந் தேதி தனது வீட்டில் இருந்து, பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பூவரசுவை உறவினர்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பூவரசு இறந்துவிட்டார்.

இந்த விபத்து தொடர்பாக பூவரசு தாயார் ஜெயா கொடுத்த புகாரின்பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்