சிவமொக்கா மாவட்டத்தில் நிரந்தர ேஜாதி மின்சார திட்டத்தில் ஊழல்; அதிகாரிகள் மீது மந்திரி ஈசுவரப்பா குற்றச்சாட்டு
சிவமொக்கா மாவட்டத்தில் நிரந்தர ஜோதி மின்சார திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக அதிகாரிகள் மீது மந்திரி ஈசுவரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.;
நிரந்தர ஜோதி மின்சார திட்டம்
சிவமொக்கா மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட பொறுப்பு மந்திரி ஈசுவரப்பா தலைமையிலான உயர் மின்துறை அதிகாரிகள் ஆலேசானை கூட்டம் நடந்தது.
இதில் கிராமப்பகுதி மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டமான நிரந்தர ஜோதி மின்சார திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கூட்டத்தில் மந்திரி ஈசுவரப்பா பேசியதாவது:-
ஊழல் நடந்துள்ளது
சிவமொக்கா மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் உள்ள ஏழை மக்களின் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நிரந்தர ேஜாதி திட்டத்தை நடைமுறை படுத்துவதில் அதிகாரிகள் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசு பணம் எல்லோருக்கும் பண்டிகை கொண்டாடுவது போல் உள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் மின்பகிர்மானம் அமைக்க ரூ.1 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்படி மெஸ்காம் செயல் இயக்குனர் பிரசாந்த் குமார் மிஸ்ராவுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ஒரு சில இடங்களில் மின் பழுது பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாகவும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கூறியுள்ளேன். மேலும் அவர்கள் தவறு செய்திருப்பது உறுதியானால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் சிவக்குமார், பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி வைசாலி, மின்வாரிய அதிகாரி பத்மாவதி உள்ளிட்டோர் இருந்தனர்.