கொல்லங்கோடு அருகே 3 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை

கொல்லங்கோடு அருகே 3 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-01-10 05:28 GMT
கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே நடைக்காவு சுண்ணாபொற்றை பகுதியை சேர்ந்தவர் சுனில், காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி சுனிதா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் குழந்தைகளுடன் இருந்த சுனிதா திடீரென அறைக்குள் சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும், சுனில் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சுனிதா உடல் கருகி இறந்தார்.

விசாரணை

இதுபற்றி கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதே சமயம் குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஷ் சாஸ்திரியும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சுனிதாவின் தாயார் ராஜம் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதில், ‘தன் மகள் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் கொடுமை படுத்தியதால் என் மகள் தற்கொலை செய்து கொண்டாள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்்கள்.

மேலும் செய்திகள்