கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி- மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்: முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
கரூரில் உள்ள அபயபிரதான ரெங்கநாதசுவாமி மற்றும் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்து. இதில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-,
அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 25-ந்தேதியும், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதியும் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காலம் என்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வருகைதர அனுமதி இல்லை. அனைவரும் வீட்டில் இருந்தே இந்த 2 கோவில்களின் கும்பாபிஷேகங்களை கண்டுகளிக்க ஏதுவாக உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனை
கோவிலுக்கு வரும் நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் வெப்பமானியின் உதவியுடன் உடல்வெப்ப பரிசோதனை செய்து, அவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் தேங்காய், பூ மற்றும் பழம் உள்ளிட் பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, போதிய அளிவிலான சானிடைசர்கள், பிளீச்சிங் பவுடர்கள் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். அவ்வப்போது சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வகையில் போதிய அளவிலான தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்வேண்டும்.
தற்காலிக கடைகளுக்கு அனுமதி இல்லை
ேமலும், கோவில்களை சுற்றி தற்காலிக கடைகள் வைக்க அனுமதி இல்லை. கோபுரத்தின் மீது ஏறி கும்பாபிஷேகம் நடத்த அமைக்கப்படும் சாரங்களின் உறுதித்தன்மை, கட்டிடங்களின் உறுதித்தன்மையினை பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். போதிய அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்து, கோவில்களுக்கு வரும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யவேண்டும்.
பக்தர்களுக்கு பாக்கெட்டுகளில் மட்டுமே அன்னதானம் வழங்கப்படும். கொரோனா தொற்று காலம் என்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதும் கடைபிடித்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இதற்கு கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும், பொதுமக்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கிடவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.