காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

வாலாஜாபாத் அருகே கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2021-01-09 23:35 GMT
கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் தடியடி நடத்திய காட்சி.
கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி பஸ் நிலையம் அருகே கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதையொட்டி 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் காரணமாக வாலாஜாபாத் பஸ் நிலையம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதிரடி படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது.

2 போலீசார் காயம்
கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகவே உடனடியாக அதிரடிப்படை போலீசார் களமிறங்கி போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்கள்.

தடியடியின் போது 2 போலீசார், 4 போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடவே அதிரடிப் படை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்