புளியங்குடியில் இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் கடத்தல்
கோவை மாவட்டத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் பிரேம்குமார் (வயது 34). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் டிரைவராக உள்ளார். இவருக்கு செல்வம் (32) என்ற மனைவியும், 9 வயதில் மகளும் உள்ளனர்.
செல்வத்தின் பெற்றோர் புளியங்குடி அருகே மேட்டுபச்சேரி என்ற ஊரில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பிரேம்குமார் குடும்பத்தினர் கடந்த ஆண்டு நவம்பரில் புளியங்குடி வந்தனர். அப்போது செல்வத்தின் உறவினரான 17 வயது பெண்ணை ஆசைவார்த்தை கூறி பிரேம்குமார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினாராம்.
கைது
இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வாசுதேவநல்லூரில் வீட்டில் பதுங்கி இருந்த பிரேம்குமாரை கைது செய்தனர். கடத்தப்பட்ட இளம்பெண்ணும் மீட்கப்பட்டார்.