போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை, சோழவந்தானில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-08 14:57 GMT
மதுரை,

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும், தொழிற்சங்களுடன் பேச்சுவார்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது.

எல்.பி.எப். பொதுச் செயலாளர் அல்போன்ஸ், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் கனகசுந்தர், அழகர்சாமி, ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் நந்தாசிங், டி.டி.எஸ்.எப். நிர்வாகி சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர்கள் தங்களின் சீருடை அணிந்து கலந்து கொண்டனர். போக்குவரத்து துறை நிர்வாகம் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் அனைத்து பணிமனைகளிலும் வெளியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் சாலைகளில் நிறுத்தப்பட்டன.

சோழவந்தான் அரசு பஸ் டிப்போ முன்பாக 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோரி தொழிற்சங்கள் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.இதில் திமுக ஒன்றிய பொறுப்புக் குழு தலைவர் பசும்பொன்மாறன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தனபால், தனலட்சுமிகண்ணன், பவுன்முருகன் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

மேலும் செய்திகள்