தென்தாமரைகுளம் அருகே மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தென்தாமரைகுளம் அருகே மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகில் உள்ள புன்னையடியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடையில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களையும் பதுக்கி, ஒரு கும்பல் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது.
அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் நேற்று காலை புன்னையடி ரேஷன் கடை அருகில் அப்பகுதி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி, மதுவை பதுக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டு இருந்தது.
மது விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு புன்னையடி சி.எஸ்.ஐ. சபை செயலாளர் அருள் தயானந்த் தலைமை தாங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், தென்தாமரைகுளம் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொது மக்கள் கலைந்து சென்றனர்.