பொங்கல் பரிசு தொகுப்பை முறையாக வினியோகிக்க தவறிய ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு தொகுப்பை முறையாக வினியோகிக்க தவறிய ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து அம்மாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அம்மாப்பேட்டை,
அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கடை ரேஷன் கடையில் சமீபத்தில் அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
அதை பெறுவதற்காக ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பொருட்களை வழங்காமல், அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசித்து வருபவர்களுக்கு நேரடியாக பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வாங்க வந்தவர்கள் நியாய விலைக்கடை முன்பு நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை பெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை முறையாக வினியோகிக்க தவறிய உக்கடை ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் அம்மாப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சோமு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் குருமூர்த்தி, பொருளாளர் தாமரைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், லட்சுமணன், நாகராஜன், ராஜமாணிக்கம், உத்திராபதி, அய்யாசாமி, சுதாகர், துரை சக்கரவர்த்தி, மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.