நச்சலூர் அருகே சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி போலீசுக்கு பயந்து தற்கொலை
நச்சலூர் அருகே சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நச்சலூர்,
திருச்சி மாவட்டம், போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நண்ணிபோசன் (வயது 47). விவசாய கூலிதொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சைல்டுலைன் அமைப்பு மூலம் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில், நண்ணிபோசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்துபோன நண்ணிபோசன் நேற்று காலை தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே முதலைப்பட்டி ஊராட்சி காவல்நகர் நன்னிகளம் பகுதியில் உள்ள மங்கான் என்பவரது பூந்தோட்ட பகுதியில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.
ேபாலீசார் விசாரணை
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நண்ணிபோசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நண்ணிபோசனின் தம்பி பழனிவேல் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட நண்ணிபோசனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக நண்ணிபோசன் தனியாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் முதலைப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.