மராட்டிய புதிய டி.ஜி.பி.யாக ஹேமந்த் நக்ராலே பொறுப்பு ஏற்பு

மராட்டிய புதிய டி.ஜி.பி.யாக ஹேமந்த் நக்ராலே பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.;

Update: 2021-01-08 02:14 GMT
மராட்டிய போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற ஹேமந்த் நக்ராலேயிடம், சுபோத் ஜேய்ஸ்வால் பொறுப்புகளை ஒப்படைத்தார்
கூடுதல் பொறுப்பு
மராட்டிய போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் சுபோத் ஜெய்ஸ்வால். இவர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மராட்டிய மாநில போலீசில் தொழில்நுட்பம் மற்றும் சட்டப்பிரிவு டி.ஜி.பி.யாக இருந்த ஹேமந்த் நக்ராலேக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. அவர் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

58 வயதான ஹேமந்த் நக்ராலே 1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர். நவிமும்பை போலீஸ் கமிஷனராகவும், மும்பையில் இணை போலீஸ் கமிஷனராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் மத்திய பணியில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டாகவும், டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார்.

துணிச்சலுடன் செயல்பட்டவர்
2008-ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது, தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஓட்டலுக்குள் சென்ற 4 போலீஸ் அதிகாரிகளில் ஹேமந்த் நக்ராலேயும் ஒருவர். இவர் அங்கு காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டார்.

மேலும் அங்கு பை ஒன்றில் பயங்கர வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு தானே முன்வந்து துணிச்சலுடன் அவை வெடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து, பின்னர் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அப்புறப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்