மாவட்டத்தில், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் அந்தந்த பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று தொடங்கியது.
கடலூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் நோயின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்பிறகு பெற்றோர்களின் கருத்துக்கு பிறகு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதற்கிடையில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகளை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) கேட்டு, அதன் முடிவுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டது.
பெற்றோரிடம் கருத்து கேட்பு
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று 226 அரசு, உதவி பெறும், தனியார் உயர்நிலைப்பள்ளிகள், 266 மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்க தேவையான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் செய்தது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவில்லை. ஒரு சில பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் பெற்றோர் வந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அவர்களில் சிலர் பள்ளிகளை திறக்கலாம் என்றும், ஒரு சிலர் தற்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் கருத்துகளை பதிவு செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) வரை கடைசி நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிக்கூடங்களுக்கு இன்றும், நாளையும் பெற்றோர் அதிக அளவில் வந்து பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்று கருத்துகளை பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவரம் தரவில்லை
இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலாவிடம் கேட்ட போது, எத்தனை பள்ளிக்கூடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது என்பதை இப்போதைக்கு கூற முடியாது. இது பற்றி அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் விவரம் கேட்கப்பட்டு உள்ளது. அவர்கள் இன்னும் தரவில்லை. அவர்கள் விவரம் தந்த பிறகு தான் எத்தனை பள்ளிகளில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள் எந்த மாதிரியான கருத்துகளை தெரிவித்து உள்ளார்கள் என்று கூற முடியும் என்றார்.