கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயார் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட பா.ஜனதா அணிகள் மற்றும் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன், மருத்துவர் பிரிவு மாநில தலைவர் விஜய் பாண்டியன், நிர்வாகிகள் தேவ், சொக்கலிங்கம், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா தயார்
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும், அதை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக உள்ளது. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் பற்றி சிந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தைரியம் கிடையாது" என்றார்.