திருவையாறு அருகே ஆடு திருடிய 4 பேர் கைது

திருவையாறு அருகே ஆடு திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-07 03:33 GMT
திருவையாறு,

திருவையாறு அருகே உள்ள பனவெளி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த மணிராசு மகன் மணிகண்டன் (வயது24). இவர் வீட்டில் ஆடு வளர்த்துவருகிறார்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஆட்டை திருடி விட்டு தப்பி சென்றனர். அவர்களை பொதுமக்கள் மற்றும் நடுக்காவேரி போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் தப்பி விட்டார். மற்ற 4 பேரும் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்மன்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் காட்டுராஜா (22), பாபநாசம் தாலுகா மணலூரை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பூபதி (19), செந்தில்குமார் மகன் மதுபாலன் (19), பழனிச்சாமி மகன் ஸ்ரீகாந்த் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இதுதொடர்பாக நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி, மதுபாலன், காட்டுராஜா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்