முத்துப்பேட்டை அருகே, தனியார் தோட்டத்தில் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
முத்துப்பேட்டை அருகே தனியார் தோட்டத்தில் தென்னங்கன்று நடுவதற்கு குழி தோண்டியபோது 9 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்பு வானோடையை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது தோட்டத்தில் தென்னை மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. இதற்காக குழி தோண்டப்பட்டது.
அப்போது அங்கு சோமாஸ்கந்தர், அம்பிகை, நடராஜர், விநாயகர், சுந்தரர் உள்ளிட்ட 9 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
பஞ்சலோக சிலைகளா?
உடனடியாக இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் ஜெகதீசன், 9 பழங்கால சிலைகளையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்தார்.
அந்த பழங்கால சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது? என்றும், அவைகள் பஞ்சலோக சிலைகளா? என்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.