பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை

பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-01-06 22:55 GMT
ஜெயங்கொண்டம்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையும், மதியமும் பெரம்பலூரில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்புகள் எடுக்கப்படாததால் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து சாலையில் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

பெரம்பலூர்-23, பாடாலூர்-2, அகரம்சீகூர்-12, ெலப்பைகுடிக்காடு-8, புதுவேட்டக்குடி-5, எறையூர்-2, கிருஷ்ணாபுரம்-2.

ஜெயங்கொண்டத்தில்...

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சாரலாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மதியம் முதல் இரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் வரத்து வாய்க்கால்களில் வெள்ளம்போல் மழைநீர் சென்று ஏரியில் கலந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக நெல், கடலை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்