நரிக்குடி அருகே மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கின - விவசாயிகள் கவலை
நரிக்குடி அருகே மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;
காரியாபட்டி,
நரிக்குடி அருகே வரிசையூர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்தநிலையில் இந்த பகுதியில் பெய்து வரும் மழையால் 50 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
காரியாபட்டி, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து கிராமங்களிலும் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளன.
இந்தநிலையில் இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும் சாய தொடங்கி விட்டன. அத்துடன் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி விட்டது.
கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள், அறுவடைக்கு பிறகு தங்கன் கடனை அடைக்கலாம் என நிம்மதியுடன் இருந்தனர். இந்தநிலையில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்குமா என்ற கவலையில் உள்ளனர்.
எனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.