நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 28 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 108 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 212 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 8 ஆயிரத்து 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 86 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 158 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 122 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 890 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 91 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.