பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி பங்கேற்பு

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி பங்கேற்றனர்.;

Update: 2021-01-06 03:33 GMT
பாவூர்சத்திரம்,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாவட்ட அவைத்தலைவர் சண்முசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மகத்தான வெற்றி பெறவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராகவும் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார்.

மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, துணை செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி, சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் சாந்தசீலன், தென்காசி நகர செயலாளர் சுடலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்