குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

சிவகிரி தாலுகா பகுதியில் 55 ரேஷன் கடைகள் மூலமாக 37,499 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகிரி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நடைபெற்றது.

Update: 2021-01-06 03:30 GMT
சிவகிரி,

சிவகிரி தாலுகா பகுதியில் 55 ரேஷன் கடைகள் மூலமாக 37,499 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகிரி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பணம் ரூ.2,500 மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்களான கரும்பு, அரிசி, சர்க்கரை, போன்ற பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், சிவில் சப்ளை தாசில்தார் ராமலிங்கம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மூர்த்தி பாண்டியன், சிவகிரி கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, உதவியாளர் அழகுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்